பிளாக் உருவாக்குவது எப்படி ?

பதிவு செய்தது நிலவன் On மே - 12 - 2009

பிளாக் என்பது ஒரு வகையான வலைத்தளம் ஆகும். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் தினக்குறிப்புகள், பொருள் ஒன்றின் செய்திக் குறிப்புகள், நிறுவனம் ஒன்றின் தினச் செய்திகள், நிறுவனத்தின் செயல்பாடுகள், கணிப்பொறி தகவல்கள், நகர தகவல்கள் என ஏதாவது ஒன்றைப் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய தளங்களை பிளாக் அல்லது வலைப்பூக்கள் என்கிறோம்.

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

பிளாக் என்பது ஒரு வகையான வலைத்தளம் ஆகும். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் தினக்குறிப்புகள், பொருள் ஒன்றின் செய்திக் குறிப்புகள், நிறுவனம் ஒன்றின் தினச் செய்திகள், நிறுவனத்தின் செயல்பாடுகள், கணிப்பொறி தகவல்கள், நகர தகவல்கள் என ஏதாவது ஒன்றைப் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய தளங்களை பிளாக் அல்லது வலைப்பூக்கள் என்கிறோம்.



இன்று அனைத்து நாடுகளிலும் பிளாக் என்பது பிரபலமான ஒன்று. நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர் வரை பிளாக் வைத்திருப்பது என்பது ஒரு பெரும் திறமையாகவே காணப்படுகிறது. தனிநபர் பிளாக்குகள் தாங்களின் கருத்துக்கள், படங்கள், காணொளிகள் என எண்ணற்றவற்றை செயல்படுத்தும் தளமாக இது விளங்குகிறது.

இவற்றை வலைத்தளங்களில் உருவாக்குதற்கு டொமைன் பெயர்கள் தேவைப்படும், அத்துடன் தகவல்களை சேமிப்பதற்கான இடங்களும் தேவைப்படும். இவற்றை நீங்கள் விரும்பும் பெயர்கள் மற்றும் இடங்களின் அளவைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக உங்களுக்கான டொமைன் பெயர் www.robertblog.com எனில் டொமைனை பதிவு செய்வதற்கான செலவு மட்டும் $10 ஆகும். இது தவிர எவ்வளவு தகவல்களை சேமிக்கப் போகிறீர்கள் என்பதற்கு அதன் அளவைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாய் உங்களுக்கு 1 GB தேவை எனில் அதற்கு 20$ செல்வழிக்க நேரிடும்.

இவ்வகையிலான செலவு எதையும் செய்யாமலேயே உங்களால் வலைப்பூக்களை உருவாக்க முடியும். அது பிளாக் உருவாக்குவதற்கான சேவையை சில தளங்கள் இலவசமாய் செய்து வருகின்றன. கீழ்க்கண்ட தளங்கள் இலவச வலைப்பூக்களை உருவாக்க உதவுகின்றன.

1. Wordpress
2. Blogger
3. Live Journal

இவற்றில் தற்போது பிளாக்கரின் மூலம் வலைப்பூவை எவ்வாறு உருவாக்கலாம் எனக் காணலாம்.

1. பிளாக்கரின் தளத்திற்குச் செல்லுங்கள் www.blogger.com

2. பிளாக்கருக்கான பயனர் கணக்கை துவங்க உங்களுக்கு ஜீமெயில் கணக்கு வைத்திருக்க வேண்டும். (பிளாக்கர் என்பது கூகிள் நிறுவனத்தின் படைப்பாகும்)
தற்போது பிளாக்கை உருவாக்க Create Blog என்னும் பொத்தானை சொடுக்கவும்.

3. மேலே கூறியது போல் உங்களிடம் ஏற்கனவே பிளாக்கர் கணக்கு இருப்பின் sign in first ஐ சொடுக்கவும். இல்லையெனில் பிளாக்கர் கணக்கை துவக்க கேட்கப்பட்ட கூகிள் கணக்கின் விபரங்களை கொடுத்து Continue ஐ சொடுக்கவும்.

4. பிளக்கர் கணக்கு உருவாக்கப்பட்டு விட்டது. தற்போது நீங்கள் பிளாக்குக்கான பெயரிட வேண்டும். பிளாக்கிற்கான தலைப்பையும், பிளாக் முகவரியையும் இட்டு முகவரி உள்ளதா என சோதித்துக் கொள்ளல்லாம். பின் Continue ஐ சொடுக்கவும்.

5. தற்போது பிளாக்குக்கான வடிவமைப்பை தேர்வு செய்ய வேண்டும். வடிவமைப்பு எனபது பிளக்குக்கான அடிப்படை கட்டமைப்பைப் பற்றியது. இதில் தலைப்பு, இடதுபக்கம், வலதுபக்கம், கீழ்த்தளம், மற்றும் தகவல்களை பொருத்த என வெவ்வேறான பகுதிகளைக் கொண்டிருக்கும். பிளாக்கர் வெவ்வேறு வடிவமைப்புகளைக் கொண்டவற்றைக் கொண்டிருக்கும். இவ்வடிவமைப்புக்களின் வண்ணங்களையும், அளவுகளையும் உங்களால் கூட்டவோ, குறைக்கவோ முடியும். அல்லது இணையத்தில் பரவிக் கிடக்கும் மற்ற வடிவமைப்புக்களையும் சேர்க்கலாம். தற்சம்யம் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து Continue ஐ சொடுக்கவும்.

6. அடுத்ததில் Start Blogging ஐ சொடுக்க உங்களுடைய பிளாக் உருவாக்கப்பட்டது.

7. உங்களது பிளாக் உருவாக்கப்பட்டதைக் காண மேல்வலது மூலையில் உள்ள Dashboard ஐ சொடுக்கவும்.

8. இவற்றில் உங்களது பிளாக்கிற்கான அனைத்துக் கருவிகளையும் காணலாம். அதாவது Posting, Settings, Layout, View Blog ஆகியன முக்கியான கருவிகளாகும்.

Edit Post >> புதிகாக தகவல்களை இடுவதற்குப் பயன்படுகிறது.
Settings >> அமைப்புகளை உங்களின் விருப்பத்த்ற்கு ஏற்ப மாற்றுவதற்கு பயன்படுகிறது.
Layout >> பிளாக்கிற்கான வடிவமைப்பில் மாற்றம் செய்ய இது உதவுகிறது.
View Blog >> பிளாக்கின் இணைய தளத்தைக் காணுவதற்கு பயன்படுகிறது.


9. தற்போது Edit Post ஐ சொடுக்குங்கள்.

10. பின் New Post ஐ சொடுக்குங்கள்.



11. தற்போது இடப்போகும் பதிவின் தலைப்பு, தகவல்கள், லேபிள்கள் என அனைத்தையும் கொடுத்து Publish Post ஐ சொடுக்குங்கள்.



12. உங்களின் பதிவு இணையத்தில் ஏற்றப்படும். தாங்கள் கொடுத்த முகவரியுடன் .blogspot.com சேர்த்து இணையத்தில் காண அல்லது View Blog ஐ சொடுக்க உங்களின் பதிவு கிடைக்கும். கீழ்க்கண்ட படத்தைக் காண்க.

0 Response to "பிளாக் உருவாக்குவது எப்படி ?"

Post a Comment

    Featured-video

    Tag-cloud