பிளாக் உருவாக்குவது எப்படி ?

பதிவு செய்தது நிலவன் On மே - 12 - 2009

பிளாக் என்பது ஒரு வகையான வலைத்தளம் ஆகும். இது தனிப்பட்ட நபர் ஒருவரின் தினக்குறிப்புகள், பொருள் ஒன்றின் செய்திக் குறிப்புகள், நிறுவனம் ஒன்றின் தினச் செய்திகள், நிறுவனத்தின் செயல்பாடுகள், கணிப்பொறி தகவல்கள், நகர தகவல்கள் என ஏதாவது ஒன்றைப் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய தளங்களை பிளாக் அல்லது வலைப்பூக்கள் என்கிறோம்.

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

POST-TITLE-HERE

Posted by Author On Month - Day - Year

POST-SUMMARY-HERE

பிளாக் உருவாக்குவது எப்படி என முதல் பகுதியில் கண்டோம். தற்போது பதிவுகளை எவ்வாறு வகைப்படுத்தலாம் எனக் காண்போம். பதிவுகளை இடுவதற்கு Dashboard மூலம் சென்று Edit Post >> New Post மூலம் உங்களின் பதிவுகளை இடலாம் என்பது அறிந்த விடயமே.

தற்போது பதிவிடுவதற்கான கருவியில் என்ன வகையானவைகளை நாம் பயன்படுத்தி பண்படுத்தலாம் எனக் காணலாம்.




1. தலைப்பு : ஒவ்வொரு பதிவிற்கான தலைப்பை இதில் இடவேண்டும்.

2. Edit Html | Compose உங்களின் பதிவை வடிவமைப்பதற்கு இக்கருவி பயன்படுகிறது. இவற்றில் Edit HTML மூலம் உங்களின் பதிவுகளில் HTML நிரல்களைக் கொண்டு இடமுடியும். உதாரணமாக எதாவது வார்த்தை ஒன்றை தடிமனாக மாற்ற வார்த்தை என்பது போன்று எழுத் Edit HTML மூலம் பயன்படுத்தலாம். Compose மூலம் நேரடியாக கொடுக்கப்பட்ட அமைப்புக் கருவிகளின் மூலம் பதிவுகளை பதிவிட முடியும் அல்லது Edit HTML மூலம் இடப்படவற்றின் விளைவை Compose மூலம் காணலாம்.

3. இதிலுள்ள Format கருவிகளின் மூலம் வார்த்தகளின் எழுத்துருக்களை மாற்றுவது, தடிமனாக்குவது, வண்ணங்களை மாற்றுவது என மாற்றலாம். இவற்றில் எழுத்துரு, எழுத்துரு அளவு, தடிமனாக்குவது, இத்தாலிக் அமைப்பாக மாற்றுவது, வண்ணமிடுவது, வலது பக்க வரிசைப்படுத்துதல், நடுவரிசை, இடதுவரிசை, நடுநிலைப்படுத்துதல், எண்வரிசைகள், புல்லட்டிங், ஆகியன வரிசையாக தரப்பட்டுள்ளன.



இக்கருவி பதிவுகளில் தேர்வு செய்யப்பட்ட வார்த்தைக்கு லிங்கை கொடுக்க Insert Link உதவுகிறது. இவற்றைப் பயன்படுத்த கீழ்க்கண்ட முறைகளை கையாளவும்.



1. இடப்பட்ட பதிவுகளில் எந்த வார்த்தைகளுக்கு லிங்க் கொடுக்கவேண்டும் என்பதை முடிவு செய்து அவ்வார்த்தையை தேர்வு செய்யவும்.
2. வடிவமைப்புக்கு கொடுக்கப்பட்ட கருவிகளில் ஐ சொடுக்கவும்.
3. சொடுக்கியவுடன் வரும் பெட்டியில் எந்த லிங்கிற்கு செல்ல வேண்டும் என்றவற்றில் அதற்கான URL ஐ கொடுத்து OK சொடுக்கவும்.
4. நீங்கள் Edit HTML ல் இருந்தால் தேர்வு செய்த வார்த்தை என இருப்பதைக் காணலாம்.
நீங்கள் Compose ல் இருந்தால் தேர்வு செய்த வார்த்தை லிங்க் கொடுக்கப்பட்ட நிலையில் கீழ்க்கண்டவாறு இருக்கலாம்.

அடுத்ததாக Insert Image எவ்வாறு பயன்படுகிறது எனபதை பார்க்கலாம். வடிவமைப்புக் கருவிகளில் உள்ள Insert Image ஐகானைச் சொடுக்கவும். Browse பொத்தானை சொடுக்கி நீங்கள் விரும்பும் படம் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Open பொத்தானை சொடுக்கவும். நீங்கள் தேர்வு செயத படத்தை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது தேர்வு செய்த படத்தை சிறிதாகவும், அளவாகவும், பெரிதாகவும் அமைக்கலாம் மற்றும் இடது, வலது, நடுப்பகுதி என அவற்றை வரிசைப்படுத்தலாம். தேவையானவற்றை தேர்வு செய்த பின் Upload Image ஐ சொடுக்கவும்.



4. இப்பகுதியில் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. Edit HTML ல் இருந்தால் HTML நிரல்களை இடலாம். இல்லையெனில் Compose ல் இருந்தால் வெறும் வார்த்தைகளை மட்டும் இடலாம்.

5. Post Options இவற்றின் மூலம் பார்வையாளர்கள் மறுமொழிகள் இடலாமா வேண்டாமா எனபதை நீங்கள் தேர்வு செய்யலாம். அத்துடன் இப்பதிவு இடப்பட்ட தேதியையும், நேரத்தையும் முடிவு செய்யலாம். பொதுவாக பதிவுகளில் புதிதாக இடப்பட்ட பதிவுகள் மேல் காணப்படும். பதிவுகளை மேலேற்றவும், கீழிறக்கவும் தேதிகளை மாற்றிக் கொண்டு செயல்படலாம்.

6. Labels ஒவ்வொரு பதிவினையை அதனின் தகவல்களுக்கு ஏற்ப லேபிள்கள் கொண்டு வகைப்படுத்தலாம். இவ்வகைப்படுத்துதல் லேபிள்களுக்கு ஏற்ற தகவல்களை வரிசைப்படுத்த உதவும்.

7. இடப்பட்ட பதிவுகளை இணையத்தில் ஏற்ற Publish Post ஐ சொடுக்கி செயல்படுத்தலாம் அல்லது Save Now உபயோகப்படுத்தி தற்காலிகமாய் சேமித்து வைக்கலாம்.

0 Response to "பதிவுகளை பண்படுத்துதல் எப்படி ?"

Post a Comment

    Featured-video

    Tag-cloud